Vellakovil,Tiruppur District
9543222262/9543777731
forsubamukurtha@gmail.com

திருமண சடங்குகள்

திருமண சடங்குகள்

பெண்பார்த்தல்

‘பெண்பார்த்தல்’ என்பது ஆண்வீட்டார், பெண்வீட்டிற்குச் சென்று பெண்ணைப் பார்ப்பதாகும். தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஏற்ற பெண் என்று கருதினால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்கின்றனர். ‘பெண்பார்த்தல்’ என்பது ஆண்மகனின் வாழ்வில் தனக்கு ஏற்ற பெண்ணைத் தேர்ந்து எடுக்கும் தேர்வு எனக் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்னர் நடைபெறும் சடங்குகள்
விஸ்வகர்மா குலத்தினர் பெண்பார்த்தலில் திருமணத்திற்கு முன்னர் நடைபெறும் சடங்குகள் இருந்து திருமணத்திற்கு முதல் நாள் வரை, சிறப்பாகச் சடங்குகளை நடத்துகின்றனர். திருமணம் நடைபெறும்வரை நடத்தப்படும் சடங்குகளைத் திருமணத்திற்கு முன்னர் நடைபெறும் சடங்குகள் என்கின்றனர்.

நிச்சயத் தாம்பூலம் பரிசம் போடுதல்

‘தாம்பூலம்’ என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும், பரிசம் என்பது பணத்தைக் குறிக்கும். நிச்சயம் என்பது உறுதி என்னும் பொருளைக் குறிக்கும். பணம், வெற்றிலை பாக்கை வைத்து முடிவு செய்தல் நிச்சயத் தாம்பூலம், பரிசம் போடுதல் எனப்படும்.

திருமணப் பத்திரிகை எழுதுதல்

திருமணப் பத்திரிகை எழுதுவது, திருமணத்திற்கு வருகை தருபவர்களுக்கு ஒரு விபரக்கடிதம் எனலாம். திருமணப் பத்திரிகையில் அனைத்து விபரங்களையும் எழுதி அச்சிட்டுக் கொடுப்பர். முதலில் குலதெய்வத்தின் பெயரை எழுதி, பேரன்புடையீர் நிகழும் இன்ன ஆண்டு, இன்ன மாதம், இன்ன நாளில், இன்ன திதியும், இன்ன நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய நல்ல நாளில், இன்ன நேரத்தில், இன்ன லக்கினத்தில் இன்ன ஊர் இன்னாருடைய பேரனும், இன்னாருடைய மகனும் இன்ன பெயருடைய, இன்ன குலம், இன்ன கோத்திரம் உடைய மணமகனுக்கும் இன்னவார் இன்னாருடைய பேத்தியும், இன்னாருடைய மகளும் இன்ன பெயருடைய, இன்ன குலம், இன்ன கோத்திரம் உடையமணமகளுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் இன்ன இடத்தில் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும். நட்பும் சூழவருகை தந்து மணமக்களை வாழ்த்தியான அன்புடன் வேண்டுகிறோம் என்று திருமணப் பத்திரிகை எழுதி மஞ்சள் பூசிப் புரோகிதர் பெரியோர்களின் முன்னிலையில் பத்திரிகையைப் படித்துக் காட்டிய பிறகு, சுற்றத்தார் அனைவரும் விருந்து முடித்துக் கொண்டு பிறகு எல்லோருக்கும் வெற்றிலை பாக்கு வழங்குவர். அன்றே அச்சிடக் கொடுத்துவிடுவர்.

உப்பு, சர்க்கரை வழங்குதல்

உப்பும், சர்க்கரையும் மங்களகரமான பொருளாகத் தமிழர்கள் கருதுகின்றனர். உப்பு ‘லட்சுமி’ என்று கருதுவர். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை‘ என்ற பழமொழிக்கு ஏற்ப உப்பை மதிப்பர். சர்க்கரை இனிப்புச் சுவையுடைய பொருள். அதனால் நல்ல காரியங்களில் முதலில் உப்பும் சர்க்கரையும் பயன்படுத்துவர், ஆண், பெண் இருவீட்டாரும் சுற்றத்தாருடன் ஒரு பல சரக்குக் கடைக்குச் சென்று முதலில் குங்குமம், சந்தனம், மஞ்சள்கொம்பு, பூ, ஒரு படி உப்பு, சர்க்கரை வாங்கிய பின்னர் அங்கு வந்துள்ள கூடையில் ஐந்து அல்லது ஒன்பது அல்லது பதினொன்று ஆண், பெண் இருபாலருக்கும் நெற்றியில் சந்தனம், குங்குமம் பொட்டிட்டுக் கடைக்காரருக்கு உண்டான தொகையை இருவீட்டாரும் கொடுத்துப் பொருள்களைப் பெண் வீட்டில் வைத்து அந்த உப்பு சர்க்கரையில் கொஞ்சம் ஆண்வீட்டார் தங்கள்மாருக்கு எடுத்துச் செல்வர். திருமணத்திற்கு வேண்டிய பொருள்கள் வாங்குவதற்காக முதலில் உப்பும், சர்க்கரையும் வாங்கப்படுகிறது. ஒரு நல்லநாளில் உப்பு, சர்க்கரை வாங்கவிட்டால், மற்றப் பொருள்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் எனக் கருதப்படுகிறது.

முளைப்பாலிகை போடுதல்

முளைப்பாலிகை போடுதல் என்ற சொல், காலப்போக்கில் முளைப்பாரி போடுதல் என்று பெயர்மாற்றம் பெற்றுள்ளது. முளைப்பாலிகை, குடும்பம் தழைத் தோங்குவதற்காகப் போடப்படுகிறது.
மூங்கில், செம்பு, பித்தளை போன்ற ஏதாவது ஒரு தட்டில் காய்ந்தவைக் கோற்புல்லை வட்டமாகச் சுருட்டித் தட்டில் வைத்துத் தண்ணீர் தெளிக்கின்றனர். காய்ந்தமாட்டுச் சாணத்தை நன்றாகக் கலந்து ஆணின் தாயார், பெண்ணின் தாய் மற்றும் ஐந்து அல்லது ஒன்பது சுமங்கலிகள் தட்டில் இட்டுத் தண்ணீர் தெளிப்பர். ஊற வைத்த நவதானியங்களை, ஒவ்வொருவரும் மூன்று முறைதட்டில் தூவுவர். மீண்டும் சாணம்,செம்மண் கலந்த கலவையைத் தூவுவர். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி அனைவரும் வணங்குவர். முளைப்பாலிகை திருமணத்திற்கு ஒன்பது அல்லது பதினொறு நாள்களுக்கு முன் போடுவர். பால், தயிர், நெய், மாட்டுச்சாணம், மாட்டின் சிறுநீர் ஆகிய ஐந்துபொருள்களையும் ஒன்றுசேர்க்கின்றனர். இதனையே பஞ்சகோமயம் எனலாம். பஞ்சம் – என்பது ஐந்தைக் குறிக்கிறது. கோ– என்பது பசுவைக் குறிக்கும். பஞ்சகோமயம் – பசுவினது ஐந்து பொருள்கள் என்று குறிக்கிறது.

மாங்கல்யத்திற்குப் பொன் உருக்குதல்

மாங்கல்யம், திருமாங்கல்யம், நாண், தாலி, பொட்டு எனப்படுபவை ஒருபொருள் குறித்த பலசொற்களாம். பொதுவாக ஒருபெண்மகளை மணக்கும் ஆடவன் பலர் அறியவும், பிறமக்களனைவரும் ஒப்புக் கொள்ளும் வண்ணம், அவள் கழுத்தில் அணிவிக்கும் முத்திரை அல்லது சின்னமே மாங்கல்யமாகும். இந்த மாங்கல்யத்திற்கு ஆண்வீட்டார் கொடுத்த தங்கத்தை உருக்குவர். இதனையே மாங்கல்யத்திற்கு பொன் உருக்குதல் எனலாம்.
திருமணம் நடக்கும் மூன்று அல்லது ஐந்து தினங்களுக்கு முன் ஒரு நல்ல நேரத்தில், அணிகலன்கள் செய்ய உதவும் மண்பாண்டத்தில் (கும்மட்டி) அல்லது விளைந்த நெல்லின் உமிகொட்டிச் சமன்செய்து, பொட்டிட்டு, ஒரு தட்டில் பூஜைக்கு உரிய பொருள்களை வைத்து வெற்றிலை பாக்கில் பணம், மாங்கல்யம் செய்வதற்குத் தங்கம் வைத்து ஆண்வீட்டார் புரோகிதரிடம் கொடுப்பர். புரோகிதர் மாங்கல்யம் செய்பவரிடம் தருவர்.
அப்போது, மஞ்சளில் விநாயகர் பிடித்து வைத்துப் பூசை செய்யப்படுகிறது. பூஜை செய்யும் போது தேங்காய் தண்ணீரை கீழே விடாமல், தேங்காய் மூடியிலேயே பிடித்து வைத்து தெய்வவழிபாடு செய்கின்றனர். அணிகலன்கள் செய்ய உதவும் மண்பாண்டத்தில் (உழைஓடு) உள்ள உமியின் மீது அடுப்புக்கரியை இட்டு கற்பூரம் ஏற்றி நெருப்பு உண்டாக்கி மிகச் சிறிய மண்பாண்டத்தில் (மூசை) தங்கத்தை உருக்கி தேங்காய் மூடியில் உள்ள தேங்காய் தண்ணீரில், தங்கத்தை இட்டு தங்கத்தை எடுத்து துடைத்து, பட்டறையில் வைத்து மணமகன் வணங்கி சுத்தியில் மூன்றடி போடச்செய்வர். அந்தப் பொன்னைத் தாம்பூல தட்டில் வைத்து மாங்கல்யம் செய்பவரிடம் கொடுப்பர், மாங்கல்யத்தை தாய்மாமன் செய்தால் மிகவும் சிறப்புடையது.
திருமாங்கல்யத்தில் சைவமாங்கல்யம், வைஷ்ணவ மாங்கல்யம் என இருவகை உள்ளது. மாங்கல்யம் செய்பவர் ஒழுக்க நெறிகடைப் பிடிப்பவராகவும், மூன்று வேளையேனும் ஆச்சாரம் கடைப்பிடிப்பவராகவும் இருக்கவேண்டும்.

முகூர்த்தக்கால் நடுதல்

முகூர்த்தகால் என்பது முகூர்த்தம் நடைபெறும் முன்பு, மணமகள் வீட்டில் மூன்று அல்லது ஐந்துநாளுக்கு முன்மணப்பந்தல் ஈசான மூலையில் நடுவதாகும்.
ஒரு மூங்கிலுக்கு சுண்ணாம்பு செம்மண்வரிகள் பூசி அரசங்கொத்து, ஆலங்கொத்து, மாங்கொத்து போன்ற மூன்று இலை சொத்துக்களையும் நவதானியம், காசு போன்றவற்றையும் ஒரு மஞ்சள் துணியில் இட்டு ஒன்று சேர்த்து, மூங்கிலில்கட்டி பூஜை செய்து வழிபடுவர். எந்த மூங்கில் மணப்பந்தல் ஈசானிய மூலையில் வீட்டு மணப்பந்தல் போட ஆரம்பிப்பர். இதுவே முகூர்த்தக்கால் நடுதலாகும்.

மணமக்கள் வீட்டில் குலதெய்வ வழிபாடு

திருமணத்திற்கு முதல்நாள் மணமக்கள் வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்வர். வீட்டில் நடைபெறும் திருமண காரியங்கள் யாவும் தங்கு தடையின்றி முன்னின்று நடத்தி தர வேண்டும் என்று குலதெய்வத்தை நினைத்து வணங்குவது குலதெய்வ வழிபாடாகும்.
குலதெய்வ வழிபாடு வீட்டில் உள்ள பூஜை அறையில் அல்லது ஆசாரத்தில் ஒருபீடம்பலகையின் மேல் தலைவாழையிலையில், கல்யாண காரியத்திற்கு வாங்கிய புதிய நகைகள், மாங்கல்யம், ஆடைகள் போன்றவற்றை மூட்டையாகக் கட்டி வைத்து, மூன்று இலைகளில் உணவு பொருட்கள் இட்டு குலதெய்வத்தை வழிபாடு செய்வதாகும். குலதெய்வ வழிபாடு மணமக்கள் அவரவர் இல்லங்களில் நடைபெறும் விருந்து முடிந்து, பெண்வீட்டார் திருமணம் நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள விநாயகர் கோவிலில் தங்கி இருப்பர்.

மணமகனை அழைத்தல்

மணமகன் அழைத்தல், எல்லாச் சமூகத்தினர் போல் விஸ்வகர்மா சமூகத்தினர் திருமணத்திலும், நடைபெறும் முக்கிய சடங்காகும். தற்காலத்தில் திருமணம் மணப்பெண் இடத்தில் நடைபெற்றால் மணமகனை அழைக்கின்றனர்.
கோவிலில் தங்கி இருக்கும் மணமகன் பெண்விட்டார், மங்கள வாத்தியத்தின் சென்று அனைவரையும் வரவேற்று, மணமகனுக்கு புதிய ஆடை ஆபரணங்களை கொடுத்து அணிந்த பின்னர் மாலை போட்டு சுமங்கலிப் பெண்கள் நலுங்கு வைத்துக் குதிரையிலே அல்லது வாகனங்களில் அல்லது நடந்தோ திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துவருவர். இதுவே, மாப்பிள்ளை அழைப்பாகும்.

மணவறை அலங்காரம்

திருமணம் நடைபெறும் இடத்தில் பந்தல் போட்டு பூ, வாழை, கமுகு, இளநீர்குலைகளை கட்டி விளக்குகளால் அழகுசெய்வார். தற்காலத்தில் பெரும்பாலான திருமணங்கள் மண்டபத்தில் நடைபெறுவதால், கடல்நுரையை வண்ண, வண்ண நிறங்களில் வெட்டி மணவறையைப் பலவிதமான வடிவங்களில் அழகு செய்கின்றனர்.

வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்ளுதல்

திருமணம் நடைபெறும் மணவறைக்குக் கீழ்கம்பளம் விரித்து, ஒருபுறம் ஆண்வீட்டாரும், மற்றொருபுறம் பெண்வீட்டாரும் இருவர். நடுவில் பெரிய தட்டு நிறைய வெற்றிலையை வைத்து நடுவில் பாக்கை வைப்பர். இருவீட்டாரும் வணக்கம் சொல்லிக் கொண்டு, தண்ணீர் பரிமாறிக் கொள்வர். தட்டில் உள்ள வெற்றிலை பாக்கை இரண்டிரண்டாக எடுத்து, ஆண்வீட்டார் பெண்வீட்டாருக்கு, பெண்வீட்டார் பெண்வீட்டாருக்கு கொடுப்பர். இதுவே வெற்றிலை பாக்கு மாற்றிக்கொள்ளுதல் என்கின்றனர்.

பஞ்சகன்யா நலுங்கு

திருமணத்திற்கு சீர்காரியங்கள் செய்யலாம், புரோகிதருக்கு உதவியாக இருக்கும், ஐந்து சுமங்கலிப் பெண்களுக்கு நலங்கு வைத்துக் கங்கணம் கட்டுவது பஞ்சகன்யா நலுங்கு என்ற சடங்காகும்.
(பஞ்ச – ஐந்து, கன்யா – கன்னிகைகள்

பஞ்சகன்யா -ஐந்து கன்னிகைகள்)

ஐந்து சுமங்கலிகளை திருமணம் நடைபெறும் மணவறைக்குள் கீழ்ப்புதுப்பாயில் அமரவைக்கின்றனர். நல்லெண்ணெய், சீயக்காய்கலவை, மஞ்சள் போன்றவற்றை அவர்கள் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு, நலுங்கு வைத்துக்கொள்வர்.

நலுங்கு

நலுங்கு என்பதுவும் கண்ணேறு கழித்தல் ஒரு வகையாகும், சந்தனம், குங்குமம், மஞ்சள், அரிசி போன்றவற்றில் பொட்டுவைத்து, மஞ்சள் அரிசி தூவுவர். இதுவே, நலுங்கு எனப்படுகிறது.

கங்கணம் கட்டுதல்

கங்கணம் வெள்ளை நூலை நீளமாக ஒன்பது நூல்சேர்த்து, மஞ்சள் பூசி வெற்றிலை பாக்கை மடித்து, அதில் மஞ்சள் கொம்பு, வைத்து முடிவது கங்கணம் எனப்படுகிறது. நலுங்கு வைத்து குளித்த பிறகு ஒரு தோட்டத்தில் மஞ்சள் அரிசி கொட்டி வெற்றிலைபாக்கு, பழம், தேங்காய் அனைத்தும் ஒன்றாக வைத்து இரண்டு கையில் ஏந்திக் கொள்பவர், புரோகிதர் அப்பெண்களின் இடது கையில் மந்திரம் கூறி மணிக்கட்டுக்கு மேல் கங்கணம் கட்டி, பொட்டு வைப்பார்.
சுமங்கலிகளுக்கு நலுங்கு வைத்தல் தற்காலத்தில் நடத்தப்படுவது இல்லை. கங்கணம் கட்டுதல் மட்டுமே நடைபெறுகிறது,

புத்து மண் கொண்டு வருதல்

அரசங்கொம்பு நடுவதற்கு மண்கொண்டு வருதலே, புற்றுமண் கொண்டு வருதலாகும்.
சுமங்கலிகள் ஐவர் ஐந்து தட்டுகளை எடுத்துக் கொண்டு, ஒரு தட்டில் பூசை பொருள்களையும், சிறிய குடத்தில் தண்ணீர், சாணம், அரிவாள் போன்ற பொருட்களையும் ஒரு தூய்மையான இடத்திற்கு எடுத்துச் சென்று, சாணம் இட்டு மெழுகி சுத்தம் செய்த பிறகு, அங்குள்ள மண்ணைத் தோண்டி தட்டுகளில் நிரப்பி வரிசையாக வைத்து பூமிதேவிக்கு பூஜை செய்து மண்ணைக் கொண்டு வந்து மணவறையின் ஈசான மூலையில் கொட்டுவர். அதன் மையத்தில் அரசங்கொம்பை நடுவர்.
தற்காலத்தில் மண்கொண்டு வரும் சடங்கு நடத்தப்படுவதில்லை. அதற்குப்பதிலாக மணவறையில் ஈசான மூலையில் அரசங்கொம்பு நடுவதற்கு ஏற்றாற் போல், கல் உருளை பயன்படுத்துகின்றனர்.

அரசங்கொம்பு கொண்டு வருதல்

மணமகனின் தோழன் மற்றவர்கள் நால்வரும் அரிவாள் எடுத்துக் கொண்டு, அரசமரம் இருக்கும் இடம் சென்று மூன்று கிளையுள்ள அரசங்கொம்பை முறித்து எடுத்துக் கொண்டுவந்து, மணவறையில் புற்றுமண் கொட்டிய இடத்தில் வைப்பர். மங்கள வாத்தியத்தின் அனைத்து செயல்களையும் செய்கின்றனர். தற்போது வேறு ஆட்கள் மூலம் அரசுகோம்பை தருவித்துக் கொள்கின்றனர்.

பஞ்ச கங்கா தீர்த்தம் கொண்டு வருதல்

சுமங்கலிப் பெண்கள் ஐவர் ஐந்து குணங்கள், பூஜை பொருட்கள், திரைச்சீலை போன்றவற்றை எடுத்துக் கொண்டு, சுற்றத்தாரும் புரோகிதர் வாத்தியத்தின் ஆறு அல்லது கிணறு இருக்கும் இடத்திற்குச் செல்கின்றனர். குடங்களில் நீர் நிரப்பி பூஜை செய்த பிறகு அவருக்கும் முன்னாலும், பின்னாலும் திரைச்சீலையை விரித்து மேலே பிடித்துக் கொள்ள, அவரும் அந்த திரைச் சீலை நிழலில் வரிசையாக மணவறை உள்ள இடத்தில் கொண்டு வந்து குடங்களை வைக்கின்றனர்.
தற்காலத்தில் புற்றுமண் கொண்டு வருதல், அரசங்கொம்பு கொண்டு வருதல், பஞ்ச கங்கா தீர்த்தம் கொண்டு வருதல், போன்ற இம்மூன்று சடங்கையும் சுருக்கி செய்கின்றனர். மணவறையின் ஈசான மூலையில் ஒரு கல் உருளை வைத்து மணப்பந்தல் மூங்கிலில் அரசங்கொம்பைச் சேர்த்துக் கட்டுகின்றனர். பஞ்ச கங்கா தீர்த்தம் கொண்டு வருதல் நடைபெறுவதில்லை.

முகூர்த்தக் கால் நடுதல்

திருமணத்திற்கு முதல் நாள் மணவறையின் ஈசான பக்கத்தில் உள்ள மூங்கிலுடன், அரசங்கொம்பிற்குக் கங்கணம் கட்டி நடுவர். இதுவே, முகூர்த்தகால் நடுதலாகும்.
மூன்று கிளை உள்ள அரசங்கொம்பின் மேல்தோலைச் செதுக்கி அதற்கு மஞ்சள் பூசி அதனுடன் அரசங்கொத்தும், மாவிலைக் கொத்தும், கங்கணமும் சேர்த்துக் கட்டி மணமகள், மணமகன் தாயார் மூன்று சுமங்கலிப் பெண்கள் ஆக ஐவரும் முகூர்த்தக்கால் எடுத்து மணவறையின் ஈசான திசையில் வடகிழக்குப் பக்கத்தில் உள்ள மணவறை பந்தல் ஒரு மூங்கிலில் சேர்த்துக் கட்டி முகூர்த்தக்காலுக்கு பூஜை செய்து வழிபடுவர். இவ்வாறு முகூர்த்தக்கால் நடுதல் என்னும் சடங்கு நடைபெறுகிறது.

மணமக்களுக்கு பால் நலுங்கு

பால் நலுங்கு என்பது பாலில் நலுங்கு வைப்பது. பால் நலுங்கு என்னும் சடங்கு விஸ்வகர்மா சமூகத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
பெரிய தட்டில் பால்ஊற்றி, இரண்டு முழுவெற்றிலை இட்டு வைத்திருப்பர். நலுங்கு வைப்பவர் தட்டில் காசுகளைப் போட்டு விட்டு இரண்டு கைகளில் வெற்றிலையை எடுத்து, மணமக்களின் இரண்டு கைகள், இரண்டு தோள்கள் தலை ஆகிய ஐந்து இடங்களில் வெற்றிலையில் பால் தோய்த்து நலுங்கு வைப்பர். இதற்கு பால் நலுங்கு என்கின்றனர். மணமக்களை தனித்தனியாக அமரவைத்து நலுங்குசெய்வர். முடிவில், நலுங்கு பாட்டுப் பாடி ஆலத்தி எடுக்கின்றனர். அப்பொழுது வாத்தியக் கருவிகள் முழங்கும்.
முற்காலத்தில் மணமக்களின் முன்உரலை வைத்து, அதில் நெல்லை இட்டு ஐந்து உலக்கைக்கும் கங்கணம் கட்டி, மூன்று முறை குத்தி உரலை சுற்றி வந்து நெல்லைப் புதுமுற்றத்தில் இட்டு இலேசாகத் தட்டுவர். இப்பழக்கம் தற்காலத்தில் நடைபெறுவதில்லை.

மணமக்களுக்கு மங்கள நீராட்டல்

மங்கள நீராட்டல் என்பது மஞ்சள் கலந்த நீரால், தலையில் ஊற்றுவது மங்கல நீராட்டுதல் என்கின்றனர்.
மணமக்களுக்கு தனித்தனியே ஐந்து சுமங்கலிகள், ஐந்து குடங்களில் மஞ்சள் கலந்த நீரை தலையில் ஊற்றி நீராடிய பின்னர், மணமக்கள் புத்தாடையை அணிவர். தற்காலத்தில் மஞ்சள் கலந்த நீரில் குளிப்பதில்லை.

மணமகனுக்கு தாய்மாமன் தலைப்பாகை கட்டுதல்

மணமகனுக்கு புதிய ஆடைகள், தாய்மாமன் அவர் மனைவியும் வைத்துக் கொடுப்பார். ஆடையை அணிந்து மணவறையில் மணமகனை அமரவைத்து பொன்னாலான அணிகலன்களை அணிவித்து தலைப்பாகையை தாய்மாமன் அணிவிப்பான். இதுவே, மணமகளுக்கு தாய்மாமன் தலைப்பாகை கட்டுதலாகும்.
திருமணத்தில் தாய்மாமன் உறவுக்கு முதன்மை இடம் வழங்கப் படுகிறது. இதேபோல் மணமகளுக்கும் புத்தாடை, அணிகலன்கள் தாய்மாமனும், அவர் மனைவியும் வழங்குகின்றனர்.

மணமகனுக்கு பூணூல் சடங்கு

மணமகனுக்கு பூணூல் சடங்கு என்பது பூணூல் போடுவதற்கு உரிய (ஆயத்த) நிலையைக் குறிக்கிறது. பூஜை பொருட்கள், கலசங்கள் வைத்துப் பூசை செய்வதற்கு ஓர் அமைப்பை அழகுபடுத்துவர். இந்த அமைப்பு மணவறையின் நடுமையத்திலே பச்சரிசி கொட்டிப் பரப்பி நான்கு புறமும் கலசங்கள் வைத்து, கலசங்களுக்கு வலப்புறத்தில் மஞ்சள் விநாயகர் பிடித்து வைத்து விநாயகருக்கு, கலசங்களுக்கும் புரோகிதரால் பூணூல் போடப்படுகிறது.
மணமகன், தாய், தந்தையர் மூவரும் மணவறையின் கிழக்கு முகமாகவும், புரோகிதர் வடக்கு முகமாகவும் அமர்ந்து மணமகன் வலக்கைப் பெருவிரலில் பூணுலை மாட்டி, தர்ப்பை புல்லும் சிறிது மஞ்சள்அரிசியும் இடது கையில் வைத்து, வலது கையில் மூடி, வலது தொடையின் மேல் வைத்துக் கொண்டு புரோகிதர் மந்திரம் சொல்ல மணமகன் திருப்பிச் சொல்வார். பூஜை செய்த பிறகு பூணூலை கலசங்களின் மேல்வைப்பர். மஞ்சள் ஆடையில் வந்த பிறகுதான் பூணூல் அணிய தருகின்றனர். அதுவரை வழிபாடு நடத்திக் கொண்டிருப்பர்.

மணமக்களுக்கு கங்கணம்கட்டுதல்

மணமக்களை அவர்கள் தாய், தந்தையருடன் தனித்தனியே மூவரையும் மணவறையில் கிழக்கு முகமாக் அமரவைத்து நந்தி பூஜை செய்து மணமக்கள் தட்டில் உள்ள பச்சரிசியில் தேங்காய், வெற்றிலைப் பாக்கை மூன்று முறை எடுத்து பின் பிறகு அனைத்து வாத்தியங்கள் முழங்க கங்கணம் கட்டிப் பொட்டு வைப்பர்.
மணமக்களுக்கு மஞ்சள் ஆடை ஓதிக் கொடுத்தல்
ஒரு தட்டத்தில் மஞ்சள் ஆடைகளை வைத்து புரோகிதர் ஆசி கூறி, மஞ்சள் அரிசி தூவி மணமக்களுக்கு தனித்தனியே வைத்துக் கொடுப்பர். விஸ்வகர்மா சமூகத்தினர் மஞ்சள் ஆடையில் தான் தாலி கட்டுவர்.

மணமகனுக்கு பூணூல் போடுதல்

விஸ்வகர்மா குலத்தில் மணமகனுக்கு பூணூல் போடுதல் என்னும் சடங்கு மிகவும் முக்கியமான சடங்காகச் செய்து வருகின்றனர்.
மஞ்சள்பூசி, பூஜை செய்து வைத்துள்ள பூணூல் ஒரு முடியை எடுத்து அத்துடன் வெள்ளி, தங்கத்தால் செய்த பூணூல் சேர்த்து மூன்று வகையான பூணூல் மணமகனுக்கு அணியக் கொடுக்கின்றனர். தற்காலத்தில் பருத்தி நூல் பூணூல் மட்டும் அணிவிக்கப்படுகிறது.

அக்னி வளர்த்தல்

நெருப்பு மூட்டி, மந்திரங்கள் கூறி தேவர்கள் வழிபாடு செய்வது அக்னி வளர்த்தலாகும்.
பதினெட்டுச் செங்கற்களைப் பயன்படுத்தி யாக சாலை அமைத்து அதில் எட்டு திக்கிலும் கோலம் போட்டு, பூஜை பொருட்களை வைத்து, உமியின் மேல் தர்ப்பைப் புல்லினால் தெற்கிலிருந்து வடக்காக, கிழக்கிலிருந்து மேற்காக மூன்று கோடுகள் போட்டு இந்தக்குறுக்கும் நெடுக்குமாக உள்ள கோடுகளின் மீது மாங்குச்சி வைத்து சூடம் ஏற்றி நெருப்பு மூட்டி பழங்கள், தானியங்கள், பட்டு துணி போன்றவற்றை யாகத் தீயில் இட்டு மந்திரங்கள்கூறி வழிபாடு செய்வது அக்னி வளர்த்தலாகும்.

How can I help U?