விஸ்வகர்மா வரலாறு
படைத்தல் கடவுளின் பரம்பரை தோற்றம்
மூலரிஷிகள்:
விராட் விஸ்வ பிரமமுடைய ஐந்து முகங்களுக்கு முறையே சத்யோஜாதகம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற பெயர்கள் உண்டு. அவைகளிலிருந்து,
மனு விஸ்வகர்மானிகிய சானக ரிஷியும்
மய விஸ்வகர்மாவாகிய சனாதன ரிஷியும்
த்வஷ்டா விஸ்வகர்மாவாகிய அபுவசை ரிஷியும்
சில்பியாகிய பிரத்ஸை ரிஷியும்
விஸ்வக்ஞராகிய சுபர்னஸ ரிஷியும்
தோன்றினார்கள். இவர்களது சந்ததியர் தாம் ஐந்தொழில்களான இரும்பு, மா, உலோக, சிற்ப, பொன் வேலைகளைச் செய்துவரும் மனு, மய, த்வஷ்டா, சில்பி, விஸ்வக்ஞ என்ற விஸ்வர்மாக்களாக விளங்குகின்றனர்.
இரும்புத் தொழிலில் விஸ்வகர்மாக்கள் (மனு)
மரத் தொழிலில் விஸ்வகர்மாக்கள் (மய)
உலோகத் தொழிலில் விஸ்வகர்மாக்கள் (த்வஷ்டா)
சிற்பவேலை விஸ்வகர்மாக்கள் (சில்பி)
ஆபரணத் தொழிலில் விஸ்வகர்மாக்கள் (விஸ்வக்ஞ)
விஸ்வகர்மாகுலத் தோற்றம்
உலகம் தோன்றிய போது விஸ்வகர்மா குலத்தினர் முதன் முதலில் தோன்றினர் என்று கருதப்படுகிறது. இவர்களின் தோற்றத்திற்கு இன்று நிலையாயுள்ள நாகரிக உலகமே சான்று பகிருகிறது.
இரும்பு, மரம், உலோகம், கல், பொன் போன்ற அடிப்படைப் பொருள்களால் உலகம் உருவாக்கப்பட்டன. அதனால் விஸ்வகர்மா குலத்தினர் முதன்முதலில் தோன்றினர் என்ற சந்தேகத்திற்கு இடமில்லை, சாஸ்திர ஆதாரங்களை உரிமையாகக் கொண்ட வேறு குலம் ஒன்று இன்றளவும் தோன்றவில்லை. ஆதலால் விஸ்வகர்மாப் பிராம்மணர்களின் பிறப்பினுயர்வு வெள்ளிடை மலையென விளங்குகிறது.
‘விஸ்வகர்மா’ பெயர்விளக்கம்
‘விஸ்வம்’ என்பதற்கு ‘உலகம்’ எனவும், ‘கர்மா’ என்பதற்குப் படைக்கிறவர் என்றும் பொருள்படுகிறது. ‘விஸ்வகர்மா’ என்பதற்கு ‘உலகத்தைப் படைக்கிறவர்’, என்றும் ‘பிரபஞ்சச் சிற்பி’ என்றும், ‘உலகப் படைப்புகளுக்கு அடிப்படையானவர்’ என்றும் வேதநூல் கூறுகிறது. பிரம்மம், கடவுள் என்னும் தனிச் சொற்கள் பிரபஞ்சத்தைப் படைத்தருளிய எல்லாம் வல்லபிரம்மத்தை விஸ்வகர்மாவைக் குறிக்கிறது.
தேவர்களையும், முனிவர்களையும் படைத்தவர் ‘விஸ்வகர்மா’ என்றும், அவரே உலகத்தைப் படைத்தவர் என்றும் உறுதியிட்டுச் சொல்லப்படுகிறது.
விஸ்வகர்மாவின் நேரான சந்ததியரான “விஸ்வகர்மப் பிராமணர்கள்” என்ற பெயர் குறுக்கல் விகாரம்பெற்று, இன்று விஸ்வப்பிராமணர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
பொற்கொல்லராகிய மரபினருக்குப் பிராம்மணப்பட்டம் இந்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே இருந்திருக்கிறது.
“விஸ்வகர்விஸ்வகர்மாகுலப்பழக்கவழக்கங்கள்மா” படைப்பு
பிரபஞ்சச் சிற்பாச்சாரியாராகிய விஸ்வகர்மா என்பவர் இந்தப் பூமியை உருவாக்கினார் எனவும், பிரதம் படைப்புக் காலத்தில் முதன் முதலில் தோன்றியது நாதம். இந்த நாதமே அனைத்துப் பிரபஞ்சத் தோற்றத்திற்கும் ஆதி காரணமாகும்.
படைப்பு முற்றுப் பெற்ற பின் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்னும் மூன்று தேவர்களையும் அவரவர்கட்கு உகந்தசக்திகளோடு உருவமாய்ப் படைத்து முறைப்படுத்தினார்.
பிரம்மா–சிருஷ்டி- ஆக்கல்
விஷ்ணு–ஸ்திதி -காத்தல்
உருத்திரன்-சம்ஹாரம்-அழித்தல்
ஆகிய முத்தொழில்களையும் புரியச் செய்தார்.
விஸ்வகர்மா – அமைப்பு
விஸ்வகர்மாவின் தோற்ற அமைப்பு ஐந்து முகங்களை உடைய அமைப்பாகும். ஐம்முகக்கடவுளான, பஞ்சமுக விஸ்வகர்மா சதாசிவ மூர்த்தியாகத் திகழ்கின்றார் எனலாம்.
விஸ்வகர்மா ஐந்துமுகங்களும், சடாமகுடங்களும், பதினைந்து கண்களும் உடையவர். அவருடைய முகம் வெண்ணிறமானது. வாமதேவம் என்னும் முகம் கருநீல நிறமுடையது. அகோர முகமானது சிவப்பு நிறமுடையது. தற்புருஷ முகம் மஞ்சள் நிறமுடையது. ஈசான முகம் பச்சை வர்ணமுடையது. சரீரமோ பொன்னிறமாக பத்துப் புஜங்களை உடையவராய், பிரகாசிக்க குண்டலங்களைக் காதில் தரித்தவராய், பொன்னாலாகிய பீதாம்பரத்தை அணிந்தவராய், நாகங்கள் உடலில் வசிக்கப் பெற்றவராய், உருத்திராட்ச மாலையை ஆபரணமாகப் பூண்டவராய், புலித்தோல் ஆடையைத் தரித்து அமைப்புப் பெற்றவர் விஸ்வகர்மா.
ஐந்து முகங்களை உடைய விஸ்வகர்மா தாமரை மலர் மீது ஒரு காலினைத் தொங்கவிட்டபடி, மற்றொரு காலினை மடித்த வண்ணம் அமர்ந்திருக்கும் வடிவமாகும். தனது பத்துக் கரங்களில் சிவமணி மாலை (அக்கமாலை) தாமரை மலர், நாகபாசம், சூலம், சிவனின் வில் (பினாகம்), வீணை, அம்பு (பாணம்), சங்கு, சக்கரம்
போன்றவற்றைத் தமது ஒன்பது கரங்களில் வைத்துள்ளார். ஒரு கரத்தை அனைவரையும் ஆசீர்வதிக்கும் பொருட்டு வைத்துள்ளார். இவ்வாறு விஸ்வகர்மாவின் வடிவம்அமைப்புப் பெற்றுள்ளது.
ஐந்து முகங்களிலிருந்து ஐந்து குமாரர்களும், அந்த ஐவர்களின் முகங்களிலிருந்து, ஐந்தைந்தாக இருபத்து ஐந்து புத்திரர்கள் வீதம் உதித்தார்கள். அந்த இருபவிஸ்வகர்மாகுலப்பழக்கவழக்கங்கள்த்து ஐந்து புத்திரர்களில் இருந்து விஸ்வகர்மா வம்ச சந்ததியர்களாக நூற்றி இருபத்தைந்து பேர்கள் தோன்றினர்.
விஸ்வகர்மாப் பிராமணர்கள் என்றால், அனைத்து உலகப் பொருள்களையும் படைக்கின்ற பிராம்மண வம்சத்தில் பிறந்தவர்கள் என்பது பொருள்.
விஸ்வகர்மா குலத்தவரின் விழாக்கள்
சங்க இலக்கியங்கள் விழாவினை ‘விழவு’, ‘விழா’, ‘சாறு’ என்ற சொற்களால் சுட்டுகின்றன.
“அழியா விழவின் அஞ்சு வருமூதூர்ப்”
“ஆலமர் செல்வன் அணிசால் மகன்விழாக்
கால்கோ ளென்றுக் கிக்கதுமென நோக்கி”
“காதலருழையராகப் பெரிது வந்து
சாறு கொளுரிற் புகல்வேன் மன்ற”
எனச் சங்க இலக்கியங்களில் ஆளப்படும் விழாவைக் குறித்தசொற்கள் பல இடங்களில் கொடை என்றும், திருவிழா என்றும், பண்டிகை என்றும், தமிழர் குறித்து வருகின்றனர்.
விஸ்வகர்மா குலத்தவர்கள் தெலுங்கு வருடப் பிறப்பு, ஆவணி அவிட்டம் போன்ற விழாக்களைச் சிறப்பாக நடத்துகின்றனர். இவ்விழாக்கள் மற்ற சமூகத்தினரிடம் இருந்து வேறுபட்டவையாகும்.
தெலுங்கு வருடப் பிறப்பு
விஸ்வகர்மா குலத்தவர்கள் தாய்மொழியான தெலுங்கு மொழி பேசுகின்றனர். அதனால், தெலுங்கு வருடப் பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். தற்காலத்தில் இக்குலத்தவர்களில் சிலர் தெலுங்கு மொழி பேசுவதில்லை.
ஆவணி அவிட்டம்
ஆவணி அவிட்டம் என்ற விழாவையும் சிறப்பாக நடத்துகின்றனர். இவ்விழாவின் போது பழைய பூணூலைக் களைந்து, புதிய பூணூல் அணிவர். இவ்விழாக்களை விஸ்வகர்மா குலத்தினர் சிறப்பான முறையில் நடத்துகின்றனர்.
விஸ்வகர்மா குலத்தினரின் குல தெய்வம்
விஸ்வகர்மா குலத்தவர் ஐந்து முகங்களை உடைய “விஸ்வகர்மா’ கடவுளையே, தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவரவருக்கு விருப்பமான தெய்வங்களைக் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
விஸ்வகர்மாப் பிராம்மணரின் ‘அநுமக்கொடி’
விஸ்வகர்மா மரபினருக்குக் குலவிருதாக இந்த ‘அநுமக்கொடி’ அமைந்துள்ளது. ஆதி விஸ்வகர்மா இதனைத் தமது விருதுக் கொடியாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த ஐவர்ண அநுமக்கொடிக் கம்பம் 16 அடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும். இக்கொடி, திருவிழா ஆரம்பிக்கும் முன்முறைப் படி
வழிபட்டுக் கம்பத்தில் ஏற்றப்பட்டுத் திருவிழா முடிந்தபின் இக்கொடி இறக்கப்படும். இக்கொடியில் விஸ்வகர்மாவின் ஐந்து சந்ததியரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
“விஸ்வகர்மா” சந்ததியினரின் சிறப்புப் பெயர்கள்
விஸ்வகர்மாக்கள் தங்கள் முன்னோர்களாகிய ரிஷிகளின் கோத்திர, சூத்திரங்கள், தங்கள் குலத்திற்கே உரிமையாகக் கொண்டு வாழ்ந்து, மக்களின் புகழையும், நன்றியையும் விரும்பாது, தங்கள் கடமைகளினின்று வழுவாது வாழ்ந்திருக்கிறார்கள். அவை காரணமாக, கம்மாளர், கம்மியர், அற்புதர், கண்வினைஞர், ஜெகத்குரு, அக்கசாலைத்தலைவர், கொல்லர், விற்பியர், தபதியர், துவட்டர், புலவர், புனைவர், பவனர், வித்தகர், ஓவியர், தஷர் என்னும் சிறப்புப் பெயர்கள் இச்சந்ததியினருக்கு உண்டு. விஸ்வகர்மா சந்ததியர்களுக்கன்றி வேறு குலத்தவர் எவருக்கும் இச்சிறப்புப் பெயர்கள் கிடையாது.
விஸ்வகர்மா குலத்தவரின் பிரிவு
விஸ்வகர்மா குலத்தவர்களில் ஐந்து பிரிவுகள் உள்ளன, இரும்பு, மர, உலோகம், கல், பொன் போன்ற தொழில் செய்பவர்களை, அவர்களின் தொழிலுக்கு ஏற்ப ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். மனு, மய, துவஷ்ட்ட சில்பி விஸ்வக்ஞயா விஸ்வகர்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் தேவரிஷிகள் என்று கூறப்படுகிறது.
விஸ்வகர்மா குலத்தவரின் ஐந்து பிரிவுகள்
1. இரும்பு வேலை செய்பவர் (மதுப்பிரம்மா)
2. மரவேலை செய்பவர் (மயப்பிரம்மா)
3. உலோக வேலை செய்பவர் (துவஷ்டப்பிரம்மா)
4. கல்சிற்ப வேலை செய்பவர் (சில்பிபிரம்மா)
5. பொன் வேலை செய்பவர் (விஸ்வக்ஞயபிரம்மா)
விஸ்வகர்மா பிராமணர்கள் அவர்களின் தொழிலின் அடிப்படையில் ஐவராகப் பிரிக்கப்பட்டனர். இரும்பு (அயம்), மரம் (தாரு), உலோகம் (தாமிரம்), கல்சிற்பம் (சிலை), தங்கம் (பொன்), போன்ற மூலப்பொருள்களை வைத்து ஐந்தொழில்கள் உருவாயின. எல்லா மூலத்தொழில்களைப் பிறப்புரிமையாகக் கொண்ட வேறொரு குலத்தை, இந்நாட்டில் காண்பது மிக அரிது.
வேதம்
மனுவுக்கு ரிக்கு வேதமும், மயனுக்கு ப்யஜூர் வேதமும், துவஷ்ட்டாவுக்கு சாம வேதமும், சில்பிக்கு அதர்வண வேதமும், விஸ்வக்ஞயனுக்கு சுழுமுனை வேதமும் (பிரணவ வேதம்) என ஐந்து பிரிவினருக்கு உரிய வேதங்கள் கூறப்பட்டுள்ளன.
தண்டம்
மனுவுக்கு வெள்ளித் தண்டமும், மயனுக்கு மூங்கில் தண்டமும், துவஷ்டவுக்கு செம்புத் தண்டமும், சிற்பிக்கு இரும்புத் தண்டமும், விஸ்வக்ஞயனுக்குப் பொன்னாலாகிய தண்டமும் உரியவையாகும்.
விஸ்வகர்மா குல வழக்கங்கள்